இரு பெண்கள்
மழை பெய்து
நெகிழ்ந்த நிலமென
தளர்ந்து கிடக்கிறது உன்னுடல்
தண்ணிய வேர்களை அவசரமேதுமின்றி
கைகளில் ஏந்திக் கொள்கிறாய்
நத்தையூர்வது போல
ஆள் காட்டி விரல்
ஊர்கையில்
நடுங்குகிற உதடுகள்
சுருண்டு படர்ந்த கூந்தலில்
மறைந்த முதுகெலும்பு
சர்ப்பம் போல நெளிகிறது
நாம் காதல் கொண்ட போது
மென்னிருள் படர்ந்த
வனத்தில் பூக்கள் மலரக் கனாக் கண்டேன்
அதிகாலையில்
துயிலெழுகையில்
உதிர்ந்து கிடக்கும் மலர்களும்
ஆற்றங் கரையோரம்
அரவூர்ந்த தடயமும்.
மழை பெய்து
நெகிழ்ந்த நிலமென
தளர்ந்து கிடக்கிறது உன்னுடல்
தண்ணிய வேர்களை அவசரமேதுமின்றி
கைகளில் ஏந்திக் கொள்கிறாய்
நத்தையூர்வது போல
ஆள் காட்டி விரல்
ஊர்கையில்
நடுங்குகிற உதடுகள்
சுருண்டு படர்ந்த கூந்தலில்
மறைந்த முதுகெலும்பு
சர்ப்பம் போல நெளிகிறது
இலவங் காய்களென
நீண்ட விரல்கள் படர்கையில்
கூழாங்கற்களின் குளிர்ச்சி
மென்னிருள் படர்ந்த
வனத்தில் பூக்கள் மலரக் கனாக் கண்டேன்
அதிகாலையில்
துயிலெழுகையில்
உதிர்ந்து கிடக்கும் மலர்களும்
ஆற்றங் கரையோரம்
அரவூர்ந்த தடயமும்.
No comments:
Post a Comment