தொலைவிலிருந்து பாடல் கேட்கிற இரவொன்றில்
காதலில் சுடர்கின்றன உன் கண்கள்
கூரையிடுக்கினூடு கசியும் நிலவைக் காட்டி
இடது தோளில் ஏதோ வரைகிற விரல் நுனிகள்
பின் தயக்கத்தோடு
ஒரு குழந்தையின் கன்னங்களை வருடுவது போல
இரவுக்கு இறக்கைகளில்லை
நிலவும் நகர்வதாயில்லை
முத்தமிடுகையில் இடறும் மூக்குத்தி
சர்ப்பங்களிரண்டு சீறுவது போல மூச்சொலி
பற்கள் காயப்படுத்தி விடக்கூடாதென
மிகுந்த கவனத்தோடு
உனது முத்தம் மெதுவாக வேர் பிடிக்கிறது
நிலவு மறைந்து போகிறது
இரவு நீள்கிறது.
காதலில் சுடர்கின்றன உன் கண்கள்
கூரையிடுக்கினூடு கசியும் நிலவைக் காட்டி
இடது தோளில் ஏதோ வரைகிற விரல் நுனிகள்
பின் தயக்கத்தோடு
ஒரு குழந்தையின் கன்னங்களை வருடுவது போல
என் மார்பின் மென்மையை மெதுவாய் வருடுகின்றன
இரவுக்கு இறக்கைகளில்லை
நிலவும் நகர்வதாயில்லை
முத்தமிடுகையில் இடறும் மூக்குத்தி
சர்ப்பங்களிரண்டு சீறுவது போல மூச்சொலி
பற்கள் காயப்படுத்தி விடக்கூடாதென
மிகுந்த கவனத்தோடு
உனது முத்தம் மெதுவாக வேர் பிடிக்கிறது
நிலவு மறைந்து போகிறது
இரவு நீள்கிறது.
No comments:
Post a Comment