Monday, September 23, 2013

கவிதைகளிரண்டு

மழை நீரிலூறிய பாசி போன்ற
உனது உன் மத்தம்
நெய்தல் நிலமெனப் பரந்த
எனதுடலின் மீது
நண்டுகளின் வேகங் கொண்டு
ஊருமுன் விரல்கள்
சிப்பியொன்றைப் பிரிக்கும்
பறவையின் வேகத்தோடு
இயங்கும் உனதிதழ்கள்
களி கொண்டு
 நாம்முயங்கும் வேளை
மேற்றிசை நிலவும்
குட்டியீன்ற மானும்
நிலை மறக்கின்றன
ஒரு கணம்
______________________

துளிரிலை
குருத்திலை
இளம் பச்சிலை
பழுத்த இலைப் பேதமற்று
பருவந் தப்பி
நோயுற்ற
இலைகள்  வீழ்தற் போல
விழுந்தன உடல்கள்
______________________

No comments:

Post a Comment