Sunday, July 18, 2010

வாக்கு மூலம்
அவர்கள் அழுதனர்
என் காதுகள் செவிடாயிற்று
மன்றாடினார் முகம் திருப்பிக் கொண்டேன்
காலில் விழுந்தனர்
நகர்ந்து பின் வாங்கினேன்.

நீ கல்லா என்றனர்
என் மீது மண் அள்ளி வீசினர்
நானோ மனிதனாயிருக்கவில்லை
ஒன்றல்ல
பல தடவைகள்.
கொன்றவர்கள் பெயர் விபரம் மனப்பாடம்.

அவர்களது ஓலம்
என்னைச் சூழ நீரெனப் பெருகுகிறது
ஒரு கல்லென நான் அமிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா, நான் உன் மகனல்ல என்கிறாய்
எனக்குச் செத்துப் போகத் துணிவிருக்கவில்லை.
------------------------------------

No comments:

Post a Comment