Monday, July 19, 2010

குழி - 02
நிரந்தரமானதல்ல.
அடுத்த நிமிடம் எங்கேயென
யாருக்குந்தேரியது.
ஐந்து பேருக்கு மட்டுமேயான குழி.
ஆனால் பதினைந்து பேருள்ளே.
ஒரே புழுக்கம்.
உடலை நெளித்து வளைத்து
காற்றைக் கூப்பிடுகிறோம்
மண்புளுப் போல.

சிறிதும் பெரிதுமாக
உட்பக்கமாகத் தலை நீட்டும் வேர்கள்.
என்ன மரமென்று யாரையுங் கேட்க முடியாது.
சினந்து கொள்வர்.

சின்னதாகக் கரும் பூச்சியொன்று கூடக் குழி பறிக்கிறது.
மூலையில் சிறிதாய் நெடுக்கும் புல்லுத்துண்டு.

பாவம் முறிகண்டிப் பிள்ளையார்.

தலைக்கு மேல் தெரிந்த
இடை வெளிக்குள்ளால்
வானத்தைப் பார்க்கிறாள்.
பகல் கூட இரவு போல ஒரே கறுப்பு.

No comments:

Post a Comment