ஒரு மாற்றமுமில்லை
முன்பே வந்தவர்கள்
புதிதாய் வருபவர்கள்
யாராலோ அழைத்துச் செல்லப்படுபவர்கள்
ஒரு மாற்றமுமில்லை
அதே கூடாரம்
அதே கழிப்பறை
மூத்திர நெடிலடிக்கும் மூலை
வன்புணர்வு
ஒரு மாற்றமுமில்லை
போர் முடிந்து
அமைதி நிலவுவதாயும்
மக்கள் ஆனந்தித்திருப்பதாயும்
செய்தியில் வாசிக்கிறார்கள்.
போர் முடிந்து
அமைதி நிலவுவதாயும்
மக்கள் ஆனந்தித்திருப்பதாயும்
செய்தியில் வாசிக்கிறார்கள்.
No comments:
Post a Comment