குழி - 01
(இன்றைய) போர் முடிந்து
சிறு ஓய்வு.
குழியிலிருந்து தலை நீட்டத் தெரிவது
நீளும் புகைச் சுருள்களும்
காற்றில் பறக்கும் எரிந்த மிச்சங்களும்.
வீதி, வீடு, கடை
மரம், காகம், சைக்கிள் எதுவுமில்லை.
நிலமே இல்லது போய் விடும் போல.
சாம்பலும், எலும்புகளும், கந்தக வாடையுமே மிச்சம்.
பயம்?
இனிமேல் பயந்து என்னவாகப் போகிறது?
இன்னும் கொஞ்சம் கறுத்தால்
ஒரு சிலராவது வெளிய வருவார்கள்
முன்னேறிச் சென்று உயிர் தப்ப.
No comments:
Post a Comment