Wednesday, September 11, 2013

தலைப்பிடாத கவிதைகள்


ஆற்றங்கரையில்
வாழ்வின் துடிப்போடும்
உந்துதலோடும்
அதன் கருமிளகுக் கண்களில்
என்னைக் காட்டுமளவுக்கு
மிக அருகில் வந்து
பாடலிசைத்துப் பறந்து மறைகிறது சிறு குருவி
நானோ காற்றில் மிதக்கும் பாடலோடு
ஆற்று வெளியெங்கணும்
பரந்து கலக்கிறேன்

-----------------

படகு விடும் சிறுவரையும்
கண் மூடியுலகு மறந்த பெண்களையும்
நீர் குடைந்து விளையாடும் ஆண்களையும்
கண் கொள்ளாது
பட்ட மரக்குவியல் மீதமர்ந்து
மென்னிறகு கோதும் நீல நாரை
ஆற்றினுட் துள்ளும்
அதன் அலகுகளறியாச் சிறுமீன்

--------------------

No comments:

Post a Comment